160x600_1 IFRAME SYNC

திங்கள், 29 ஜூலை, 2024

கொண்டைக்கடலை மீல்மேக்கர் கூட்டு

 தேவையான பொருள்கள்

1. வெள்ளை கொண்டைக்கடலை_1/2 கப்.

2. மீல் மேக்கர் - 2 கப்.

3. மிளகு - 1/2 ஸ்பூன்.

4. சீரகம் - 1 ஸ்பூன்.

5. மிளகாய் வற்றல் - 5 எண்ணிக்கை

6. சின்ன வெங்காயம் - 100 கிராம்.

7. சோம்பு - 1/2 ஸ்பூன்.

8. எண்ணெய் - 1/2 ஸ்பூன்

9. வெள்ளை எள் - 2 ஸ்பூன்.

10. உப்பு தேவையான அளவு.11. கொத்தமல்லி, கறிவேப்பிலை.

செய்முறை:

வெள்ளை கொண்டைக்கடலை யை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

         வெள்ளை எள்ளை மிதமான சூட்டில் வறுக்கவும்.

மிளகு, சீரகம் ஒன்றாக சேர்த்துப் பொடியாக்கவும்.

          மீல் மேக்கரை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிட்டுப் பிழிந்து மிக்ஸியில் போட்டு மூன்று முறை சுற்றினால் உதிரியாக வரும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு சோம்பு போட்டு வெடித்ததும் 100 கிராம் சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த பொடியையும் வெள்ளை கொண்டக்கடலையையும் சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு சேர்த்து அதனுடன் உதிரியாக உள்ள மீல் மேக்கரையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். கடைசியாக வறுத்த வெள்ளை எள்ளு தூவி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். சாப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.