தேவையானபொருட்கள்:
மட்டன்-1/2 கிலோ.
பச்சை மிளகாய்-10.
சீரகம்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-1கப்.
எண்ணெய்-100 மி.லி.
மிளகாய் தூள்- 2தேக்கரண்டி..
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.புளித்தண்ணீர்-2கப்.
கறிமசாலா-1தேக்கரண்டி.
சோம்பு அரைத்த விழுது-1தேக்கரண்டி.
கசகசா-1தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு விழுது-1மேஜைக்கரண்டி.
வெங்காயம்-2.
தக்காளி-2.
எள்-1தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
அரைத்த சோம்பு விழுதுடன் உப்பு சேர்த்து,அதில் மட்டனை 30 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் 5டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து சீரகம்,தக்காளி,வெங்காயத்தைப் போட்டு பொரிந்தவுடன மசாலா சேர்த்த மட்டனை போடவும்.எண்ணெய் தனியாக பிரிந்து வரும்வரை வறுக்கவும்.2கப் சூடான தண்ணீர் சேர்க்கவும்.15 நிமிடத்திற்கு கறியை வேகவைக்கவும்.வாணலியில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கீறிய மிளகாயை வதக்கவும்.கறியில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுடுசாதத்துடன் சாப்பிட சுவையான சில்லி மட்டன் மசாலா தயார்.
நன்றி.