160x600_1 IFRAME SYNC

வெள்ளி, 12 அக்டோபர், 2018

கடலை மாவு பர்பி

வணக்கம்.
கடலை மாவு பர்பி
தேவையான பொருட்கள் :
கடலை மாவு --1  1/2டம்ளர் (ஒன்றை டம்ளர்)
பால் --1 1/2டம்ளர் (ஒன்றை டம்ளர்)
சர்க்கரை---3டம்ளர் (மூன்று டம்ளர்)
நெய்--4தேக்கரண்டி
செய்முறை:
கடலை மாவில் நெய் விட்டு உதிரியாக பிசைந்து வைக்கவும்.வாணலியில் பால் ஊற்றி அத்துடன் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.பால் கொதித்ததும் பிசைந்து வைத்துள்ள கடலை மாவை அதில் போட்டு அடிபிடிக்காமல் கிளரவும் .கலவை நன்றாக பொங்கி  நுரைத்து வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் பரப்பி விடவும்.கத்தியால் சிறிய வில்லைகளாக போடவும்.சுவையான கடலை மாவு பர்பி தயார் .
                                                                   நன்றி.

பாசிப்பருப்பு அல்வா

வணக்கம்.
பாசிப்பருப்பு அல்வா
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு --1/4கிலோ
சர்க்கரை--1/4கிலோ
நெய்--300மி.லி
ஏலக்காய்--5
முந்திரி பருப்பு --25கிராம்
பஜ்ஜி பவுடர் --சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பை 1/2மணி நேரம் ஊற வைத்து அரைத்து ,வாணலியில் நெய் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு கலவையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளரவும்.கிளரி  வரும் போது சிறிதளவு பஜ்ஜி பவுடர் சேர்க்கவும்.அல்வா பதம் வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி  வறுத்த முந்திரி பருப்பு வைத்து அலங்கரிக்கவும்.சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
                                 நன்றி.

வியாழன், 11 அக்டோபர், 2018

மைதா ஸ்வீட் கேக்

வணக்கம்.
மைதா ஸ்வீட் கேக்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு --1/2கிலோ
சர்க்கரை--600கிராம்
டால்டா--400கிராம்
ஏலக்காய்--6
உப்பு சிறிதளவு
செய்முறை:
மைதா மாவை  சிறிதளவு உப்பு சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும். 1டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை பாகு காய்ச்சவும்.பாகு கம்பி பதத்தில் வருவதற்கு முன்பே மைதாமாவை போட்டு அதனுடன் டால்டாவையும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளக்கொண்டே வரவும்.எல்லாம் நன்றாக சுருண்டு வரும் போது ஏலக்காயை பொடி செய்து பாேடவும்.ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பி  விடவும்.கத்தியால் வில்லைகளாகப் போடவும்.மைதா ஸ்வீட் கேக் சாப்பிட சுவையாக இருக்கும்.
                                                  நன்றி

சோளக்கதிர் அல்வா

வணக்கம்.
சோளக்கதிர் அல்வா
தேவையான பொருட்கள்:
உதிர்த்த  சோளக்கதிர் மணிகள்--1டம்ளர்
சர்க்கரை--3/4 டம்ளர்
முந்திரி பருப்பு--10
நெய்--தேவயான அளவு
ஏலக்காய்-5
செய்முறை:
உதிர்த்த சோளக்கதிர் மணிகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, முந்திரி பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளரவும்.சிறிது கெட்டியான பிறகு ஏலக்காய், நெய் சேர்த்து இரக்கவும்.சுவையான சோளக்கதிர் அல்வா ரெடி.
               நன்றி.


உருளைக்கிழங்கு வடை

வணக்கம்.
உருளைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு-4
பொரிகடலை மாவு -1/4கப்
அரிசி மாவு --1௧ப்
தக்காளி--4
எண்ணெய் தயாரிக்க தேவையான அளவு
பெருங்காயம் --சிறிதளவு
இஞ்சி -சிறிய துண்டு
பச்சை மிளகாய்-- 6
தேங்காய் துருவல் --1கப்
கறிவேப்பிலை ,கொத்தமல்லி --தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி,பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து துருவி வைத்துக்கொள்ளவும். தக்காளியை சுடு தண்ணீரில் விட்டு தோல் உரிக்கவும் ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழஙகு,தக்காளி,அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கறிவேப்பிலை,கொத்து மல்லி தளை போட்டு,பெருங்காயம் சேர்த்து வடையாக  தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு வடை தயார்.

சனி, 6 அக்டோபர், 2018

கோதுமை பரோட்டா

வணக்கம்.
கோதுமை பரோட்டா.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -1/2கிலோ
எண்ணெய்--4ஸ்பூன்
புதினா -சிறிதளவு
மாவு பிசைய தேவையான அளவு தண்ணீர்
நெய் -தேவையான அளவு .
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவை நன்றாக சலித்து உப்பு, எண்ணெய்,தண்ணீர் சேர்த்து இளகலாக பிசைந்து வைத்து கொள்ளவும்.புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பிசைந்து வைத்து உள்ள  கோதுமை மாவை சிறு உருண்டையாக வைத்து அதன் மேல் நறுக்கி வைத்து  உள்ள புதினாவை தூவி நான்கு மடிப்பாக மடித்து சிறிது கனமாக  தேய்க்கவும்.தவாவில் நெய் ஊற்றி சதுரமாக தேய்த்து வைத்து உள்ள கோதுமை கலவையை சுட்டு எடுக்கவும். சுவையான கோதுமை பரோட்டா ரெடி.
             நன்றி!

வெள்ளி, 5 அக்டோபர், 2018

அவசர இனிப்பு தோசை

வணக்கம்.
அவசர இனிப்பு தோசை
கோதுமை மாவு ---400கிராம்.
பச்சரிசி மாவு ---200கிராம்.
தேங்காய் --1மூடி துருவியது.
சர்க்கரை-- 300கிராம்.
எண்ணெய் --2குழிக்கரண்டி.
உப்பு -தேவையான அளவு .
செய்முறை:
கோதுமை மாவையும்,பச்சரிசி மாவையும் ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி ,தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கெ்ள்ளவும்.இத்துடன் சர்க்கரை,தேங்காய் துருவல் சேர்கவும்.அடுப்பில் தோசைக்கல் வைத்து கல் சூடு ஆன பின் எண்ணெய் ஊற்றி தோசையாக சுட்டு எடுக்கவும்.அவசர இனிப்பு தோசை தயார். காரமான சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
                                நன்றி!


வியாழன், 4 அக்டோபர், 2018

அவல் உப்புமா

வணக்கம்
அவல் உப்புமா.
தேவையான பொருட்கள்:
அவல்--250கிராம்.
மிளகு --1ஸ்பூன்.
கடுகு --1ஸ்பூன்.
உளுந்தம் பருப்பு --1ஸ்பூன் .
எண்ணெய் --50கிராம்.
உப்பு --தேவையான அளவு.
செய்முறை:
அவலை30நிமிடம் ஊறவைக்கவும்.வாணலியில் எண்ணெய்யை ஊற்றி சூடு வந்ததும் மிளகு, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து வைத்துக் கொள்ள வும். ஊற வைத்த அவலை தண்ணீர் வடித்தபின்  உப்பு சேர்த்து வாணலியில் போட்டு நன்றாக கிளரி விடவும் . அவல் உப்புமா ரெடி.மாலை நேரத்தில் சாப்பிட சுவையான உணவு.