160x600_1 IFRAME SYNC

சமையல் டிப்ஸ்.

1. இட்லி ,தோசைக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டவும்.இட்லியும், தோசையும் சாப்பிட மிருதுவாக இருக்கும்.

2. தோசை ஊற்றும் பொழுது தோசை பிய்ந்து போனால் சிறிய வெங்காயத்தை தோசை சுடும் கல் மீது நன்றாக தேய்த்தால் தோசை நன்றாக வரும்.

3.ரவை உப்புமா மிஞ்சிவிட்டால் அதில் சிறிதளவு அரிசிமாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.

4. தேங்காய்,பொரிகடலை சேர்த்து அரைத்த சட்னி மீந்து போய்விட்டால் சாம்பாரில் ஊற்றினால் சாம்பார் சுவையாக இருக்கும்.

5. எலுமிச்சைப்பழம் காய்ந்து விட்டால் கொதி நீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச்சாறு கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக