160x600_1 IFRAME SYNC

புதன், 26 செப்டம்பர், 2018

தேங்காய் பால் முறுக்கு.

வணக்கம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு --3டம்ளர்.
உளுந்தம் பருப்பு  மாவு --1டம்ளர்.
தேங்காய் பால் (மாவு பிசைவதற்காக )
சீரகம் --3டீஸ்பூன்.
எண்ணெய் --1/2லிட்டர்.
பெருங்காயம் ---சிறிதளவு.
உப்பு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரசி மாவு, உளுந்து மாவு ,சீரகம் ,பெருங்காயம்,உப்பு இவற்றை ஒன்றாக தேங்காய் பால் சேர்த்து, சூடான எண்ணெய்யை அதில் ஊற்றி நன்றாக பிசையவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்து உள்ள மாவை தேன்குழல் முறுக்கு அச்சில் போட்டு சுட்டு எடுக்கவும்.சுவையான தேங்காய் பால் முறுக்கு தயார்.
                                           நன்றி.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

துவரம் பருப்பு தயிர் பச்சடி .

வணக்கம்.
துவரம் பருப்பு தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் --2கப்.
துவரம் பருப்பு --1/2 கப்.
கடுகு --1/2டீஸ்பூன்.
பெருங்காயம் --1/2டீஸ்பூன்.
எண்ணெய் ---2மேஜைகரண்டி.
காய்ந்த மிளகாய் --6

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்.அதன் பின் வறுத்து வைத்துள்ள துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும்பெருங்காயப் பொடியை சேர்த்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு கெட்டியான தயிரில் ருசிக்காக உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள துவரம் பருப்பு கலவையை சேர்கவும்.ருசியான துவரம் பருப்பு தயிர் பச்சடி தயார்.


இனிப்பு எள்ளு சாதம்.

வணக்கம்.
இனிப்பு எள்ளு சாதம் .
தேவையான பொருட்கள் :
 சுத்தம் செய்த எள்---1கப் அளவு ..
வெல்லம் --1கப் அளவு .
வடித்த சாதம் --8கப் அளவு.
ஏலக்காய் பொடி சிறிதளவு.
நெய்----4மேஜைகரண்டி.
உப்பு  சிறிதளவு.
செய்முறை:
 அடுப்பில் வாணலியை வைத்து சுத்தம் செய்த எள்ளை நெய் விட்டு நன்றாக வறுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க  விடவும் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, வடித்த சாதத்தை அதில் போட்டு கிளறி விடவும்.அத்துடன் தயாராக வைத்துள்ள எள்ளுப் பொடியை சேர்கவும்.சாதம் உதிரி உதிரியாக கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.இனிப்பு எள்ளு சாதம் தயார்.

திங்கள், 24 செப்டம்பர், 2018

பாசிப்பருப்பு தோசை.

வணக்கம்.
பாசிப்பருப்பு தோசை.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு ---250 கிராம்.
பச்சரிசி --100 கிராம்.
சின்ன வெங்காயம்-- 20
பச்சை மிளகாய் --10
நெய் --100 கிராம்.
கறிவேப்பிலை சிறிய கொத்து.
பெருங்காயம் தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு .
செய்முறை:
பாசிப்பருப்பையும்,பச்சரிசியையும் தனித்தனியாக 12 மணி நேரத்திற்க்கு ஊறவைத்து மாவாக ஆட்டிவைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.தோசை ஊற்றும் சமயம் கரைத்து வைத்துள்ள மாவில்  நறுக்கிய சின்ன வெங்காயம் ,பச்சைமிளகாய்,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை இவைகளை சேர்த்து தோசையாக நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.சுவையான பாசிப்பருப்பு தோசை தயார்.

                                 

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மிளகு குழம்பு .

வணக்கம்.
மிளகு குழம்பு.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்--200கிராம்.
புளி எலுமிச்சை அளவு.
உப்பு தேவையான அளவு.
மிளகு -3ஸ்பூன்.
மிளகாய் வற்றல் --4
கடலை பருப்பு --2ஸ்பூன்.
கொத்தமல்லி விதை --2ஸ்பூன்.
 உளுந்தம் பருப்பு --2ஸ்பூன்.
நல்லெண்ணெய் --1ஸ்பூன்.
 கடுகு --1/2ஸ்பூன்.
பெருங்காயம் சிறிதளவு.
அரிசி மாவு --1ஸ்பூன்.
கறிவேப்பிலை --1கொத்து.
செய்முறை:
இருப்புச்சட்டியில் எண்ணெய் விட்டு மிளகு,மிளகாய் வற்றல், கடலை பருப்பு, மல்லி,உளுந்தம்  பருப்பு  ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.இவற்றை அம்மியில் இட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வழுதாகஅரைத்தெடுக்கவும்.தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டிக்கொண்டு அத்துடன் உப்பு ,அரைத்த விழுதையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும் .கத்திரிக்காயை காம்பு நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி இத்துடன் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு  பாத்திரத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும்.கொதிவந்ததும் அரிசி மாவுக் கரைத்து ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை கிள்ளி போட்டு நன்றாக கிளரி விடவும்.
சுவையான மிளகு குழம்பு தயார்.


வாழைத் தண்டு கூட்டு .

வணக்கம்.
 வாழைத் தண்டு கூட்டு .
தேவையான பொருட்கள் :
பெரிய வாழைத்தண்டு -1
வேகவைத்த பயத்தம் பருப்பு -1கப்
கடுகு--- 1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
கடலை பருப்பு -1டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு --6டீஸ்பூன்
மிளகாய் வற்றல் --5
எண்ணெய் --3டீஸ்பூன்
மஞ்சள் பொடி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்து, மிளகாய்வற்றல்
சேர்த்து  நன்றாக வறுத்து ,அரைக்கவும்.வாழைத்தண்டு,மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.வேக வைத்த. பயத்தம் பருப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.கடைசியாக அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைத்துத் (க,பருப்பு கடுகு, உளுந்து சேர்த்து )தாளித்து  ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.மதிய நேரத்தில் சாப்பிட சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.
             



சனி, 22 செப்டம்பர், 2018

பச்சரிசி பணியாரம்.

வணக்கம்.
பச்சரிசி பணியாரம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி---1/2 கிலோ.
உளுந்தம் பருப்பு --1/2 கிலோ.
கடலை எண்ணெய்-  1/2 லிட்டர்.
தேங்காய் பால் --2 லிட்டர்.
 உப்பு தேவையான அளவு.
செய்முறை :
பச்சரிசி,உளுந்து இரண்டையும் நன்றாக தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டியாக அரைக்கவும்.பின்பு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்னணய் ஊற்றி காயவைத்து மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்னணயில் பொறித்து  எடுக்கவும்.பொறித்து எடுத்த உருண்டையை  தேங்காய் பாலில் ஊற வைக்கவும். பச்சரிசி பணியாரம் தயார்.ஊறிய பின் சாப்பிடவும் .பண்டிகை காலத்திற்கு ஏற்ற சுவையான  பலகாரம் .
               நன்றி .

உலர் திராட்சை கேசரி.

வணக்கம்.
உலர் திராட்சை கேசரி.
 தேவையான பொருட்கள் :
 ௨லர் திராட்சை ---200 கிராம்.
 பால் --1 -1/2  டம்ளர் .
  தண்ணீர் --1/2 டம்ளர்.
  சேமியா ---1டம்ளர்.
  கேசரி பவுடர் சிறிதளவு.
  ஏலக்காய்--5
   சர்க்கரை --1டம்ளர்.
  நெய் --1/2
செய்முறை :
வாணலியை  அடுப்பில் வைத்து சேமியாவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பால் ,தண்ணீர் இரண்டயும் ஒன்றாக ஊற்றி அதில்  பொடி செய்த ஏலக்காய்,கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.கொதித்த பின்பு சேமியா,உலர் திராட்சை போட்டு வேகவிடவும்.சர்கரையை அதில் போட்டு நெய் விட்டு கிளரவும்.அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி உலர் திராட்சை சேமியா சேர்ந்த கலவையை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் கழித்து கத்தியால் சிறிய துண்டுகளாக போடவும். உலர் திராட்சை கேசரி தயார்.சாப்பிட சுவையாக இருக்கும்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

அவல் பர்பி.

வணக்கம்.
தேவையான பொருட்கள்:
அவல் --250 கிராம்.
தேங்காய் --1 பெரியது.
கடலை மாவு --1 டேபிள் ஸ்பூன்.
பால்--500 மில்லி லிட்டர்.
சர்க்கரை ---500 கிலோ.
நெய்-- 150 கிராம்.
கேசரி பவுடர் --கால் டீஸ்பூன்.
ஏலக்காய் பொடி --அரை டீஸ்பூன்.
செய்முறை:
 அவலை சுத்தம் செய்து வாணலியில்  ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு நிமிடம் வறுத்த பின் மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.கடலை  மாவை  வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.தேங்காயைத்துருவி,தண்ணீர் விடாமல் கரகரவென்று  அனைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காயவைத்து பாதியாக வற்றவிடவும் இத்துடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.சர்க்கரை கரைந்ததும் கேசரிப்பவுடரை பாலில்கரைத்துச் சேர்க்கவும்.பின் பொடி செய்த அவல்,கடலை மாவு,தேங்காய் மூன்றையும் சேர்த்து, சிறிது சிறிதாக நெய் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கிளரவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வரும் சமயம் ஏலப் பொடி சேர்த்து நெய் தடவிய தட்டில் பரப்பி ஆறிய பின் துண்டுகள் போடவும்.சுவையான அவல் பர்பி தயார்.
           
.