160x600_1 IFRAME SYNC

வெள்ளி, 22 அக்டோபர், 2021

காளான் குருமா

 


தேவையான பொருட்கள்
1. காளான் - 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
2. பச்சை பட்டாணி - 100 கிராம்.
3.தக்காளி - 150 கிராம்.
4. பெரிய வெங்காயம்-50 கிராம்.
6. தேங்காய் - 1 மூடி.
7. சோம்பு - 1/2 கரண்டி.
8. வெள்ளை பூண்டு - 2
9. கசகசா - 1 கரண்டி.
10. இஞ்சி - சிறிய துண்டு.
11. கிராம்பு- 3
12. பட்டை - சிறியது
13. பச்சைமிளகாய் - 20 இராம்
14. தேவையான அளவு எண்ணெய்.
15. பொட்டுக்கடலை - 1 கரண்டி.
16. தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு துருவிய தேங்காய், சோம்பு, கசகசா, வெள்ளை பூண்டு, இஞ்சி, கிராம்பு சேர்த்து வறுத்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி, காளான், பட்டை ஆகியவற்றை கொட்டி வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். சுவையான காளான் குருமா தயார். சப்பாத்திக்கு சாப்பிட சுவையாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக