தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு 200கிராம்.
மிளகாய் வற்றல்--3
சின்ன வெங்காயம் 100கிராம்.
கறிவேப்பிலை 1கொத்து.
உப்பு தேவையான அளவு.
மல்லிப் பொடி 3 மேஜைக் கரண்டி..
மிளகாய் பொடி 2 ஸ்பூன்.தக்காளி2 புளி எலுமிச்சையளவு.
அரைப்பதற்கு:
மிளகு5 கிராம்
சீரகம்5கிராம்
தேங்காய்1/2மூடி
சோம்பு 5கிராம்
செய்முறை: பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் மிளகாய் வற்றல் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
மல்லிப்பொடி மிளகாய் பொடி புளி சிறிதளவு கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பிறகு பருப்பு உருண்டைபோட்டு மிதமான சூட்டில் 10நிமிடம் வைக்கவும். அதன்பிறகு தேங்காய்
அரைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பருண்டை குழம்பு தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக