தேவையான பொருட்கள்:
கோழி-1கிலோ.
பச்சைமிளகாய்-10.
பெரியவெங்காயம்-4
தக்காளி-6புதினா-சிறிதளவு.
கறிவேப்பிலை-தேவையான அளவு.
மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி-4 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-100 மி.லி.
நெய்-50 கிராம். தண்ணீர்-2கப்.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
1.கோழியை சுத்தப்படுத்தி துண்டு துண்டாக நறுக்கவும். 2.பெரியவெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
3.தக்காளியை வெட்டி வைக்கவும்.
4. புதினா இலையை நறுக்கிவைக்கவும்.
5. வாணலியில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் பெரியவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,புதினா ஆகியவைகளைப் போட்டு தாளிக்கவும்.
6.அந்த தாளிப்பில் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக கிளரிவிட்டுக்கொண்டு 2கப் தண்ணீர் ஊற்றவும்.
7.தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் கோழி இறைச்சி துண்டுகளைப் போட்டு உப்பு சேர்த்து மூடிவைக்கவும்.அவை நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
8. சிறிதளவு நெய்யில் பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வறுத்து சிக்கன்ரோஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்