160x600_1 IFRAME SYNC

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

தந்தூரி கோபி.

தேவையான பொருட்கள்:
காலிபிளவர்_750 கிராம்,     தயிர்_100கிராம்,வறுத்த நிலக்கடலை பவுடர்_2மேஜைகரண்டி,மிளகாய்த்தூள்_2மேஜைகரண்டி,இஞ்சி,பூண்டு விழுது_2மேஜைகரண்டி,எலுமிச்சை சாறு_2தேக்கரண்டி,கரம்மசாலா பவுடர்_1/2தேக்கரண்டி,உப்பு,மற்றும் எண்ணெய்_தேவையான அளவு.
செய்முறை:காலிபிளவரை நன்றாக கழுவிக்கொள்ளவும்.உப்பு,மஞ்சள்த்தூள் சேர்த்து வேகவைக்கவும்.பாதி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். மேலே கொடுக்கப்பட்ட மசாலாப்பொருட்களை வேகவைத்த காலிபிளவருடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மசாலா கலந்த காலிபிளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்பொழுது சுவையான  தந்தூரி கோபி தயார்

சனி, 3 ஆகஸ்ட், 2019

சிக்கன் ரோஸ்ட்.

தேவையான பொருட்கள்:

 கோழி-1கிலோ.
பச்சைமிளகாய்-10.
பெரியவெங்காயம்-4
தக்காளி-6
புதினா-சிறிதளவு.
கறிவேப்பிலை-தேவையான அளவு.
மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி-4 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-100 மி.லி.
நெய்-50 கிராம்.             தண்ணீர்-2கப்.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
1.கோழியை சுத்தப்படுத்தி துண்டு துண்டாக நறுக்கவும்.                                    2.பெரியவெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
3.தக்காளியை வெட்டி வைக்கவும்.
4. புதினா இலையை நறுக்கிவைக்கவும்.
5. வாணலியில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் பெரியவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,புதினா ஆகியவைகளைப் போட்டு தாளிக்கவும்.
6.அந்த தாளிப்பில் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக கிளரிவிட்டுக்கொண்டு 2கப் தண்ணீர் ஊற்றவும்.
7.தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் கோழி இறைச்சி துண்டுகளைப் போட்டு உப்பு சேர்த்து மூடிவைக்கவும்.அவை நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
8. சிறிதளவு நெய்யில் பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வறுத்து சிக்கன்ரோஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்

செவ்வாய், 30 ஜூலை, 2019

செவன்கப் கேக்.

தேவையான பொருட்கள்:
1.கடலைமாவு-1கப்.
2. காய்ச்சிய பால்-2கப்.
3.நெய்-1கப்.
4.சர்க்கரை-3கப்.
செய்முறை:
1.வாணலியில் நெய்யை ஊற்றி கடலைமாவையும் அதில் போட்டு,நெய்யும் ,கடலைமாவும் சேர்ந்து பூரித்துக் கொண்டு வரும் சமயம் பால்,சர்க்கரை இரண்டையும் கொட்டி கிளரிக் கொண்டிருக்க வேண்டும்.பந்து போல சுருண்டு வரும் வரை கிளரவும்.
2.ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் வாணலியில் உள்ள கலவையை பரவலாக ஊற்றி, சூடு ஆறிய பின்பு கேக் வடிவத்தில் வில்லைகளாக போடவும்.சுவையான செவன்கப் கேக் தயார்.
நன்றி.

திங்கள், 29 ஜூலை, 2019

கேரட் தோசை.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி 200கிராம்.
புழுங்கல் அரிசி 200கிராம்.
கேரட் 1/2 கிலோ.
வரமிளகாய  20.
தேங்காய் 1/2 மூடி.
உப்ப, பெருங்காயம்,கறிவேப்பிலைதேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் கலந்து ஊறவைக்கவும்.துருவிய தேங்காய்மற்றும்கேரட்டை துருவி போட்டு ஆட்டவும்.அதனுடன் பெருங்காயம்,கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக ஆட்டி தோசையாக சுட்டு எடுக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு 200கிராம்.
மிளகாய் வற்றல்--3
சின்ன வெங்காயம் 100கிராம்.
கறிவேப்பிலை 1கொத்து.
உப்பு தேவையான அளவு.
மல்லிப் பொடி 3 மேஜைக் கரண்டி..
மிளகாய் பொடி 2 ஸ்பூன்.தக்காளி2 புளி எலுமிச்சையளவு.

அரைப்பதற்கு:

மிளகு5 கிராம்
சீரகம்5கிராம்
தேங்காய்1/2மூடி
சோம்பு 5கிராம்

செய்முறை:   பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் மிளகாய் வற்றல்  சிறிது சோம்பு  சேர்த்து அரைத்து  உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம்      தக்காளி கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

மல்லிப்பொடி மிளகாய் பொடி புளி சிறிதளவு கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

 பிறகு பருப்பு உருண்டைபோட்டு மிதமான சூட்டில் 10நிமிடம் வைக்கவும். அதன்பிறகு  தேங்காய் 

அரைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு  இறக்கினால் சுவையான பருண்டை குழம்பு தயார்.


வியாழன், 14 பிப்ரவரி, 2019

காளான் பொரியல்

வணக்கம்.
காளான் பொரியல்:
தேவையான பொருட்கள்
காளான்-250கிராம்.
மஞ்சள் பொடி- சிறிதளவு
பெரிய வெங்காயம்-100கிராம்.
எண்நெய் -தேவையான அளவு .
தேங்காய் துருவல்-3தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-4
கடுகு-தேவையான அளவு.
கறிவேப்பிலை-சிறிதளவு.
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
காளான்,பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்நெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து காளானைவதக்கவும்.மஞ்சள் தூள் ,தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வெந்ததும் இறக்கவும்.சுவையான காளான் பொரியல் தயார்.
                                       நன்றி.

வியாழன், 1 நவம்பர், 2018

பேரீச்சம்பழ துக்கடா

வணக்கம்.
பேரீச்சம்பழ துக்டா:
தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம்--150கிராம்(கொட்டை நீக்கியது)
சர்க்கரை--150கிராம்.
மைதா--250கிராம்.
எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
மைதாமாவையும், சர்க்கரையையும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.இதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் ஒரு பேரீச்சம்பழத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.சுவையான பேரீச்சம்பழ துக்கடா தயார் .
                  நன்றி.