160x600_1 IFRAME SYNC

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சில்லி மட்டன் மசாலா.

தேவையானபொருட்கள்:

மட்டன்-1/2 கிலோ.
பச்சை மிளகாய்-10.
சீரகம்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-1கப்.
எண்ணெய்-100 மி.லி.
மிளகாய் தூள்- 2தேக்கரண்டி..
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
புளித்தண்ணீர்-2கப்.
கறிமசாலா-1தேக்கரண்டி.
சோம்பு அரைத்த விழுது-1தேக்கரண்டி.
கசகசா-1தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு விழுது-1மேஜைக்கரண்டி.
வெங்காயம்-2.
தக்காளி-2.
எள்-1தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
அரைத்த சோம்பு விழுதுடன் உப்பு சேர்த்து,அதில் மட்டனை 30 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் 5டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து சீரகம்,தக்காளி,வெங்காயத்தைப் போட்டு பொரிந்தவுடன  மசாலா சேர்த்த மட்டனை போடவும்.எண்ணெய் தனியாக பிரிந்து வரும்வரை வறுக்கவும்.2கப் சூடான தண்ணீர் சேர்க்கவும்.15 நிமிடத்திற்கு கறியை வேகவைக்கவும்.வாணலியில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து கீறிய மிளகாயை வதக்கவும்.கறியில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுடுசாதத்துடன் சாப்பிட சுவையான சில்லி மட்டன் மசாலா தயார்.
          நன்றி.

சனி, 17 ஆகஸ்ட், 2019

வத்தக் குழம்பு.

தேவையான பொருட்கள்:

மாங்காய் வத்தல்-100கிராம்.
அவரை வத்தல்-100கிராம்.
கத்தரி வத்தல்-100கிராம்.
பூண்டு-2
வெங்காயம்-100கிராம்.
மிளகாய்பொடி-5ஸ்பூன்.
புளி-சிறிதளவு.
தக்காளி-1.
கடுகு, உழுந்தம்பருப்பு,சோம்பு-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

வத்தல்களை தண்ணீர் விட்டு ஊறவைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பூண்டு உரித்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி உழுந்தம்பருப்பு,கடுகு,சோம்பு போட்டு தாளித்து அதில் வெங்காயம்,பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.புளியை கரைத்து ஊற்றி மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, வற்றலை சேர்த்து வெந்தவுடன் இறக்கவும்.சுவையான வத்த குழம்பு தயார்.

           நன்றி.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

ரவா லட்டு.

தேவையான பொருட்கள்.

ரவை-1கப்.
சீனி-1கப்.
வறுத்த முந்திரிப் பருப்பு-20கிராம்.
தேங்காய்த் துறுவல்-1டேபிள் ஸ்பூன்.
நெய்-தேவையானஅளவு.

செய்முறை:

வாணலியில் 1ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும்.தேங்காயை வெறும் வாணலியில் வதக்கவும்.ரவையையும்,சீனியையும்ஒன்றாகப்போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.நன்றாக பொடியானதும் தேங்காயைப் போட்டு அரைக்கவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.நெய்யை சூடுபண்ணி அதில் முந்திரிப் பருப்பை வறுக்கவும். மாவில் நெய்யை சூடுபண்ணி ஊற்றி கிளரவும்.இதை சூடுபொறுக்கும் அளவு வந்தவுடன் லட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான ரவா லட்டு தயார்.

       நன்றி.


புதன், 14 ஆகஸ்ட், 2019

வெள்ளை மொச்சை உப்புமா.

தேவையான பொருட்கள்:
வெள்ளை மொச்சை--1/4கிலோ.
தேங்காய் துறுவல்- தேவையான அளவு.
பச்சை மிளகாய்-5.
வர மிளகாய்-2.
இஞ்சி-சிறிதளவு.
கறிவேப்பிலை-சிறிதளவு.
சின்ன வெங்காயம்-100கிராம்.
கொத்யமல்லிஇலை-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
தாளிக்க- கடுகு, உழுந்து -சிறிதளவு.
பெரிய வெங்காயம்-1
எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளை மொச்சையை 4 மணி நேரம் ஊறவைத்து காயவைக்கவும். மொச்சை காய்ந்ததும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். மொச்சயை மிக்ஸில் மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.இஞ்சி ,கறிவேப்பிலை போட்டு பொரிக்கவும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உழுந்தம்பருப்பு ,சின்ன வெங்காயம் வர மிளகாய் போட்டு தாளித்து தண்ணீர் ஊற்றவும்.நன்கு கொதித்ததும் அதில் மொச்சை மாவைத் தூவவும்.பெரிய வெங்காயம், தேங்காய் துறுவல்,கொத்தமல்லி இலை இஞ்சி போட்டு இறக்கவும் சுவையான வெள்ளை மொச்சை உப்புமா தயார்.

            நன்றி.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

வெள்ளரிக்காய் பஜ்ஜி.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் வட்டமாக வெட்டியது - தேவையான அளவு.
கடலைமாவு--4 கப் அளவு.
அரிசிமாவு-1கப் அளவு.
மிளகாய்தூள்-தேவையான அளவு.
கரம் மசாலா- தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

கடலைமாவுடன் அரிசிமாவு,கரம்மசாலா,மிளகாய்தூள்,தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்துதேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்
 தயாரான பஜ்ஜி மாவில்  வட்டமாக வெட்டிய வெள்ளரிக்காய் துண்டுகளை அதில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வெள்ளரிக்காய் பஜ்ஜி தயார்.

    நன்றி 

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

தந்தூரி கோபி.

தேவையான பொருட்கள்:
காலிபிளவர்_750 கிராம்,     தயிர்_100கிராம்,வறுத்த நிலக்கடலை பவுடர்_2மேஜைகரண்டி,மிளகாய்த்தூள்_2மேஜைகரண்டி,இஞ்சி,பூண்டு விழுது_2மேஜைகரண்டி,எலுமிச்சை சாறு_2தேக்கரண்டி,கரம்மசாலா பவுடர்_1/2தேக்கரண்டி,உப்பு,மற்றும் எண்ணெய்_தேவையான அளவு.
செய்முறை:காலிபிளவரை நன்றாக கழுவிக்கொள்ளவும்.உப்பு,மஞ்சள்த்தூள் சேர்த்து வேகவைக்கவும்.பாதி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். மேலே கொடுக்கப்பட்ட மசாலாப்பொருட்களை வேகவைத்த காலிபிளவருடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மசாலா கலந்த காலிபிளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்பொழுது சுவையான  தந்தூரி கோபி தயார்

சனி, 3 ஆகஸ்ட், 2019

சிக்கன் ரோஸ்ட்.

தேவையான பொருட்கள்:

 கோழி-1கிலோ.
பச்சைமிளகாய்-10.
பெரியவெங்காயம்-4
தக்காளி-6
புதினா-சிறிதளவு.
கறிவேப்பிலை-தேவையான அளவு.
மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி-4 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-100 மி.லி.
நெய்-50 கிராம்.             தண்ணீர்-2கப்.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
1.கோழியை சுத்தப்படுத்தி துண்டு துண்டாக நறுக்கவும்.                                    2.பெரியவெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
3.தக்காளியை வெட்டி வைக்கவும்.
4. புதினா இலையை நறுக்கிவைக்கவும்.
5. வாணலியில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் பெரியவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,புதினா ஆகியவைகளைப் போட்டு தாளிக்கவும்.
6.அந்த தாளிப்பில் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக கிளரிவிட்டுக்கொண்டு 2கப் தண்ணீர் ஊற்றவும்.
7.தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் கோழி இறைச்சி துண்டுகளைப் போட்டு உப்பு சேர்த்து மூடிவைக்கவும்.அவை நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
8. சிறிதளவு நெய்யில் பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வறுத்து சிக்கன்ரோஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்